இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ..!!

இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை துவங்கி வைத்த அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹூ, முதல் நபராக தடுப்பூசியை போட்டு கொண்டார்.

இதன் மூலம், தடுப்பூசி போட்டு கொண்ட உலக தலைவர்களுல் அவரும் இடம்பிடித்துள்ளார்.

அமெரிக்கா, பிரிட்டனை தொடர்ந்து இஸ்ரேலில், பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசிக்கு அங்கிகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, தடுப்பூசி போடும் பணி துவங்கியது. முதற்கட்டமாக, சுகாதார பணியாளர்கள், மருத்துவமனையில் தங்கி பணிபுரியும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.

இதனை அந்நாட்டு பிரதமர் நேதன்யாஹூ துவங்கி வைத்து, முதலாவது நபராக, பொது மக்கள் முன்னிலையில் தடுப்பூசியை போட்டு கொண்டார்.

இதன் பின்னர் அவர் கூறுகையில், இந்த தடுப்பூசி மீதுநம்பிக்கை உள்ளது. இந்த நாள் மிகச்சிறந்த நாளாகும். வழக்கமான பணிகளுக்கு, இந்நாள் இஸ்ரேலை திருப்பியுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த வாரம் முதல் பைசர் நிறுவனத்தின் மருந்து இஸ்ரேலுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மாடர்னா மற்றும் அஸ்ட்ரா ஜெனகா நிறுவனத்தின் மருந்துகளுக்கும், கொள்முதல் செய்யப்பட உள்ளது. 90 லட்சம் பேர் வசிக்கும் இஸ்ரேலில் தற்போதைய நிலையில், 3,72,401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே