பிரதமர் நரேந்திர மோடி நாளை கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் 3 நிறுவனங்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அகமதாபாத்தில் உள்ள ஸைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் மற்றும் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகிய நிறுவனங்களுக்கு செல்கிறார்.

கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பு குறித்து விஞ்ஞானிகளுடன் ஆலோசிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியா ஒரு பெரிய நோய் எதிர்ப்பு திட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறது, உலகின் 60% தடுப்பூசிகளை உற்பத்தி செய்கிறது.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா உட்பட, ஆறு பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்டுள்ளது.

கோவிட் -19 க்கு எதிராக 100 கோடி மக்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நோய்க்கு எதிராக சுமார் 50 கோடி டோஸ் தடுப்பூசிகளைப் பெறவும் பயன்படுத்தவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இந்த 50 கோடி டோஸ் மருந்து மூலம், அடுத்த ஆண்டு ஜூலை மாதத்துக்குள் 25 கோடி மக்கள் வரை நோய்த்தடுப்பு மருந்துகளை வழங்க இருக்கிறது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண் அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ளது.

ரஷ்யாவின் ஸ்புட்னிக்-5 கொரோனா தடுப்பு மருந்து 92 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாக அந்நாட்டு அரசுத் தரப்பில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே