இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..; மருத்துவமனை இடிந்து விழுந்தது..!!

இந்தோனேசியாவில் இன்று காலை சுலவேசி தீவில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் 7 பேர் உயிரிழந்தனர். பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை மீட்க அரசு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்தின் தீவிரத்தைக் கண்டு மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே சென்றனர்.

தற்போது அங்கு மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டது.

இங்குள்ள ஒரு மருத்துவமனைஇடிந்து விழுந்தது. இதில், பல நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் இடிபாடுகளில் சிக்கியதாக கூறப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே