திமுக மீது பொன்.ராதாகிருஷ்ணன் பாய்ச்சல்!

தமிழகத்தில் ஆட்சிக்கு வருவதற்காக பிணந்தின்னி அரசியலை திமுக கையில் எடுத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக் கொள்வதாகவும் இனிவரும் நாட்களில் பாரதிய ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ்-திமுக கூட்டணி கட்சிகள் விஷமப் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டிய பொன்ராதாகிருஷ்ணன், திமுக ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக எது வேண்டுமானாலும் செய்யத் தயாராகி விட்டதாகவும் சாடினார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே