கேரளாவிலும் ட்ரெண்டிங்கில் PoMoneModi ஹேஷ்டாக்..!!

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதரம் நரேந்திர மோடி, சற்று முன்னர் சென்னை வந்தடைந்த நிலையில், #GoBackModi என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பிரதமரின் வருகையயொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை எல்லைக்குள் வர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மாநகர பேருந்துக்கள், மக்களின் வாகனங்கள் செல்லவும் முக்கிய இடங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதித்து போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

பிரதமா் வருவதையொட்டி சென்னையில் 6,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தனி விமானம் மூலம் மீனம்பாக்கம் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு வருகிறார்.

அங்கிருந்து நேரு உள் விளையாட்டரங்குக்கு வரும் பிரதமர் நிகழ்ச்சி முடிந்த பிறகு கேரள மாநிலம் கொச்சிக்கு புறப்படுகிறார்.

பிரதமா் வருகையையொட்டி, சென்னை முழுவதும் போலீஸார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில் நிலையங்கள்,பேருந்து நிலையங்கள், மார்க்கெட்டுகள், வழிபாட்டு தலங்களில் காவல்துறையினா் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

சுமார் 10, 000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதரம் நரேந்திர மோடி, சற்று முன்னர் சென்னை வந்தடைந்தார்.

ஹெலிகாப்டர் மூலம் சென்னை அடையாறு ஐஎன்எஸ் தளத்திற்கு செல்கிறார். அங்கிருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார்.

இந்நிலையில், சென்னையில் மெட்ரோ ரயிலின் அனைத்து வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் இலவசமாக பயணம் செய்யலாம் என மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

அதாவது அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இலவசமாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் நிறுவனம் அனுமதி அளித்துள்ளது.

அந்த வகையில், சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில் வழித்தடங்களிலும் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் இன்று இரவு 11 மணி வரை பயணிகள் இலவசமாகப் பயணம் செய்ய முடியும்.

இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு வருகை தரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்கிற ஹேஷ்டேக் நேற்று மலை முதலே டிரெண்டாகி வருகிறது..

அதே போல கேரள வருகைக்கும் எதிர்க்கும் விதத்தில் #PoMoneModi என்கிற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

டெல்லியில் விவசாயிகளின் போராட்டம், புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். குடியுரிமை திருத்தச் சட்டம், பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, சமையல் கேஸ் விலை உயர்வு, மாநில சுயாட்சி எதிராக மத்திய அரசு செயல்பாடு, பெருநிறுவனங்களுக்கு சாதகமான செயல்பாடு, இந்தி மற்றும் சமஸ்ஹிருதம் மொழித் திணிப்பு என குற்றச்சாட்டுகளை முன்வைத்து #GoBackModi என்ற ஹேஸ்டேக் டிரெண்டாகி வருகிறது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே