அரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc

திருமாறன். Jc

காலை வளைதளங்களில் நுழையும்போது ஜோதிமணி எம்.பி – கரு.நாகராஜன் பிரச்சனைதான் அரைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.
பேச்சு சுதந்திரம், சபை நாகரிகம், கண்ணியமாக வாதாடுதல், எதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம், எதிராளியின் கருத்துக்கள் என்ன என்பதைப்பற்றிய பிரக்ஞையே இல்லாமல் வாதிடுபவர்கள்தான் கட்சி பேதமின்றி அரசியலில் இன்று அதிகமாக இருக்கிறார்கள். அதிலும் பாஜகவினர் இதில் அனைவரையும் விட ஒருபடி மேல்.

அவர்களைப் பொறுத்தவரை பெண் என்பவள் கலாச்சாரக் குறியீடு, பாரதத் தாய், தேவதை, கற்புக்கரசி, மனைவி, மகள், கல்விக் கடவுள் சரஸ்வதி, செல்வம் கொட்டும் லட்சுமி என எப்படி வேண்டுமானாலும் இருக்கலாமே தவிர தன் சுயம் சார்ந்த பெண்ணாக மட்டும் இருந்து விடக் கூடாது. அதுவும் பொது வெளியில் வந்து விட்டால் அவர்களின் நடத்தைகளைப் பற்றி பேசுவது என்பது இந்தக் கலாச்சாரக் காவலர்களுக்கு அல்வா சாப்பிடுவது போன்றது.

பொதுவெளியில் என்று அல்ல இவர்களின் உறவுகளிலேயோ, நட்புகளிலேயோ கூட ஒரு பெண் தன்னை விட புத்திசாலியாகவோ, சுயமாக சிந்திப்பவளாகவோ, முடிவெடிப்பவளாகவோ இருந்து விட்டால் அவளின் நடத்தைப் பற்றி தவறாக எண்ணத் தொடங்கி விடுவார்கள். இந்தப் போக்கு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், மென்பொருள் நிறுவனங்கள் என எங்கும் நீக்கமற நிறைத்திருக்கும் ஆண், பெண் பேதமில்லாமல் அனைவரிடமும் பரவியிருக்கும் ஒரு சமூக நோய்.

நீங்கள் சற்று கவனித்துப் பார்த்தால் ஒரு உண்மை புரியும். பெண்களை பலாத்காரப் படுத்துபவர்கள், அவர்களிடம் அத்துமீறி நடக்க முயற்சிப்பவர்கள், சிறு வயதுப் பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுவோர், அவர்களின் தனிமையில் எல்லை மீறுபவர்களில் பெரும்பாலானோர் தீவிர மத, தெய்வ நம்பிக்கை உடையவர்களாகவே இருப்பார்கள். அவர்களது மதமும், கடவுளர்களும் அவர்களுக்குப் புகட்டிய வாழ்க்கை முறைகள் என்னவென்பதை யாமறியேன் பராபரமே.

ஜெயலலிதா உயிருடன் இருந்த போது எனக்கு அவரது ஆணவத்தின் மீது ஒரு வெறுப்பு இருந்தது. ஆனால் தற்போது நடப்பவைகளைப் பார்க்கும் போது அவரது மனோபாவமும், அவருக்குக் கீழ் இருந்த அமைச்சர்கள் மற்றும் கட்சியினரை, குறிப்பாக ஆண்களை அவர் நடத்திய விதம் சரியோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்களும் அதற்குத் தகுதியானவர்களே என்பதும் புலனாகிறது. அந்த வகையில் பார்க்கும் போது நமது பாரதப் பிரதமர் மோடியும் ஒரு பெண்ணாக இல்லாமல் போய்விட்டாரே என்பதுதான் எனது தற்போதைய மிகப் பெரிய வருத்தம்.

IStandWithJothimani என்று ஹாஷ்டேக் போட்டு டிரெண்ட் செய்வதைவிட கரு.நாகராஜன் போன்ற ஆட்களை விவதாங்களுக்கு அழைக்காமல் இருப்பது சமூகத்திற்கு நல்லது. அதைவிட இதுபோன்ற விவாதங்களை நேரம் செலவழித்துப் பார்க்காமல் இருப்பது உங்கள் மனத்திற்கும், மூளைக்கும், கண்களுக்கும் நல்லது.

திருமாறன். Jc | FB : @maran.jc


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 399 posts and counting. See all posts by Jiiva

4 thoughts on “அரசியல் ஆண் சிங்கங்களும் – பெண் புலிகளும் – திருமாறன். Jc

 • நாய் வாழும் பிஜேபி யும் ஒன்று

  Reply
 • ஜோதிமணியை பற்றி கரூர் மக்கள் அறிவார்கள்

  Reply
  • எனக்கு ஒரு சந்தேகம் இவனுங்க இங்க மட்டும் தான் இப்படியா இல்ல நாடு முழுசா இப்டு இருக்கணனுகளா

   Reply
   • ஜோதி மணி நீ எப்டிபட்ட ஆளுனு ஊருக்கே தெரியும் பத்தினி வேசம் போடாத

    Reply

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே