காவல்துறையினர் வீடுகளுக்கு பால் விநியோகம் கிடையாது’ – பால் முகவர்கள் சங்கம் அதிரடி

போலீஸ்காரர்கள் வீடுகளுக்கு நாளை முதல் பால் சப்ளை செய்வதில்லை என்று தமிழ்நாடு பால் முகர்வோர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கம் முடிவெடுத்துள்ளது.

இந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் அதன் தலைவர் கே. பொன்னுசாமி கூறியிருப்பதாவது ,” பால் அத்தியாவசியப் பொருள் என்பதால், பால் சப்ளை மற்றும் விற்பனையில் எந்த தடையும் இருக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பல நகரங்களில் பால் முகர்வோர்களை போலீஸார் விற்பனை செய்ய விடாமல் தடுக்கின்றனர்.

பல டெலிவரி ஏஜன்டுகளையும் போலீஸார் துன்புறுத்தியுள்ளனர். இந்த பிரச்னை குறித்து தமிழ்நாடு முதல்வர், பால்வளத்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் துறை உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளோம் அதனால், நாளை முதல் போலீஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு பால் சப்ளை செய்ய மாட்டோம். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வரை இந்த நிலை தொடரும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருள்கள் விற்பனைக்கு தடையில்லை என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது.

Jiiva

தலைமை ஆசிரியர்.

Jiiva has 413 posts and counting. See all posts by Jiiva

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே