மருத்துவ நிபுணர்களுடன் இன்று மாலை பிரதமர் மோடி ஆலோசனை..!!

நாட்டின் முக்கிய மருத்துவ நிபுணர்களுடனும், பிறகு மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.

இன்று காலை அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்ட நிலையில், மாலையில் மருத்துவ நிபுணர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

கரோனா பரவல் குறித்து நாட்டின் முக்கிய மருத்துவ நிபுணர்களுடன் இன்று மாலை 4.30 மணிக்கு காணொலி வாயிலாக பிரதமர் ஆலோசிக்க உள்ளார்.

பின்னர் கரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களின் நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

நாட்டில் நிலவும் கரோனா தொற்றின் இரண்டாம் அலை, தடுப்பூசி திட்டம் குறித்து பிரதமா் நரேந்திர மோடி மத்திய அரசின் உயரதிகாரிகளுடன் காணொலி வழியாக சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.

கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், வென்டிலேட்டா்கள், ஆக்சிஜன், தடுப்பூசி உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று மருத்துவர்களுடனும், மருந்து உற்பத்தி நிறுவனங்களுடனும் பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே