டெல்லியில் ஒரு வாரம் முழு பொது முடக்கத்தை அமல்படுத்த திட்டம்..??

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் டில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,000 தாண்டி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் டெல்லி அரசு அதிரடி முடிவுகளை எடுக்க இருப்பதாகவும் அது குறித்த அறிவிப்பு இன்று வெளியாகும் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன.

அந்த வகையில் சற்று முன் வெளியான தகவலின் படி இன்று முதல் ஏப்ரல் 26 ஆம் தேதி வரை டெல்லியில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது

இதனை அடுத்து முக்கியமான காரணங்கள் இன்றி பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டெல்லி அரசு எச்சரித்துள்ளது.

தலைநகர் டெல்லியிலேயே முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே