டெல்லியில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை ஒரு வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநிலங்களிலும் அம்மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தலைநகர் டெல்லியில், கொரோனா வைரஸின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இதனால், இன்று இரவு முதல் அடுத்த திங்கள் காலை வரை டெல்லி முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், அனைத்து தனியார் அலுவலர்களின் ஊழியர்களும், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறும், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே திறந்திருக்கும் என்றும், டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே