தொடர்ந்து 9ஆவது நாளாக உயரும் பெட்ரோல், டீசல் விலை!

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகன போக்குவரத்து அதிகரித்துள்ள நிலையில், 9ஆவது நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக வாகன போக்குவரத்து முடங்கிது. அப்போது பெட்ரோல், டீசல் விற்பனை மிகவும் குறைந்ததால் எண்ணெய் நிறுவனங்கள் தினந்தோறும் விலையை நிர்ணயிக்கவில்லை.

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வாகனங்கள் அதிக அளவில் இயங்க தொடங்கிய நிலையில், கடந்த 7ஆம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

அன்றைய தினம் பெட்ரோல் 53 காசுகளும், டீசல் 52 காசுகளும் உயர்த்தப்பட்டது. 

அதன் பின்னர் தினந்தோறும் விலை உயர்த்தப்படுகிறது.

அவ்வகையில் இன்று 9ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 43 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 79 ரூபாய் 96 காசுகளாக உள்ளது.

டீசல் விலை லிட்டருக்கு 51 காசுகள் உயர்ந்து ஒரு லிட்டர் 72 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Tags :


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே