பெட்ரோல், டீசல் விலை உயர்வு..!!

ஈரான், அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, இந்தியாவில் தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில் பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று  9 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 11 காசுகளும் உயர்த்தப்பட்டு இருந்தது.

இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 78 ரூபாய் 48 காசாகவும், டீசல் விலை 72 ரூபாய் 39 காசாகவும் உயர்ந்திருந்தது. 

இதனுடன் சேர்த்து 4 நாள்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 38 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 55 காசுகளும் அதிகரித்துள்ளன.

ஈராக், ஈரான் நாடுகளில் இருந்தே அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்து வருகிறது. 

இதனால் அந்நாடுகளில் ஏற்படும் குழப்பம், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தும். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே