மக்களுக்கு சுமையை கூட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை.., தொடர்ந்து 16வது நாளாக விலையேற்றம் !!

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து உலகம் முழுவதும் பல நாடுகளில் பெரிய அளவில் பொருளாதார சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதத்திலிருந்து இந்தியாவில் ஊரடங்கு நிலவிவருகிறது. கொரோனா வைரஸ் அதிகம் பாதித்த பகுதிகள் முற்றிலுமாக முடங்கியுள்ளது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதித்துள்ளது.

கோடிக்கணக்கானோர் தங்கள் வேலையை இழந்து வருமானம் இன்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்களுக்கு மீண்டும் சுமையை கூட்டும் வகையாக கடந்த 16ன் நாட்களில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.

கடந்த 16 நாட்களில் பெட்ரோல் விலை லிட்டருக்கு சுமார் 9.21 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு சுமார் 8.55 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னை

ஒரு லிட்டர் பெட்ரோல் 82.87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
ஒரு லிட்டர் டீசல் 76.30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியப் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின் பரிந்துரைப்படி, இந்த விலை உயர்வு அமல் செய்யப்பட்டுள்ளது. ஓவ்வொரு மாநிலத்திற்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள், அந்த மாநிலத்தின் விற்பனை வரி விகிதத்தைப் பொறுத்து மாறுபடும் என்பது குறிபிடத்தக்கது. இந்த பெட்ரோல் டீசல் விலை ஏற்றம் பொதுமக்கள் வாங்கும் பொருட்களில் கடுமையான விலை ஏற்றம் கண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே