முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் – அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி..!!

தில்லியில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் கரோனா பாதிப்பு 3-ம் அலை வீசிக் கொண்டிருக்கிறது. இதனால், கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து காணப்படுகிறது.

எனினும், 3-ம் அலையின் உச்சத்தைக் கரோனா கடந்துவிட்டதாக தில்லி சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் இந்த வார தொடக்கத்தில் தெரிவித்தார்.

இந்நிலையில் தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது.

இதையடுத்து, கரோனா பரவலைக் கட்டுப்படுத்த பொது இடங்களில் முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூ. 2,000 அபராதம் விதிக்கப்படும் என கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன் பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.500 அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே