பெரியார் பிறந்தநாள் – முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!!

பெரியாரின் பிறந்தநாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பெரியாரின் பிறந்தநாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பெரியாருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி, இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலங்களிலும் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.

முன்னதாக, பெரியாரின் பிறந்தநாளையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியாரின் சிலைக்கு கீழ் உள்ள பெரியாரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள் துரைமுருகன், கனிமொழி எம்.பி, ஆ.ராசா எம்.பி. உள்ளிட்ட திமுகவினருக்கு பெரியாருக்கு மரியாதை செலுத்தினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே