கொரோனா அதிகரிப்புக்கு மக்களின் அலட்சியமே காரணம் – ஹர்ஷ்வர்தன்

மக்களின் அலட்சியம் காரணமாகவே கரோனா பரவல் அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ்வா்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் தினசரி எண்ணிக்கை, 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

கடந்த 3 நாள்களில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமானோா் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பரவ தொடங்கிய கரோனா முதல் அலை, செப்டம்பர் மாதம் உச்சம் அடைந்தது.

மத்திய, மாநில அரசுகள் எடுத்து வந்த நடவடிக்கையால் தொற்று பரவல் படிப்படியாக குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

குறிப்பாக, மகாராஷ்டிரம், கர்நாடகா, தமிழ்நாடு, பஞ்சாப், மத்திய பிரதேசம், தில்லி, குஜராத், ஹரியானா, கேரளம் உள்ள மாநிலங்களில் மட்டும் தொற்று பரவல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், கரோனா தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளதை அடுத்து, கரோனா ஒழிந்துவிட்டதாக கருதி பலரும் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கை கடைபிடிக்காமல் மக்களின் அலட்சியம் இருந்ததால் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளது என்று ஹர்ஷ்வர்தன் கூறினார்.

மேலும் இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை வருகிறது.

கரோனா முதல் அலையை எப்படி நாம் எதிா்கொண்டமோ, அதேபோல, இரண்டாவது அலையை நாம் எதிா்கொள்ள அனைவரும் முகக்கவசம், சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை அவசியம் கடைபிடித்து ஒத்துழைப்பு தர வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே