பிரதமரின் வேண்டுகோளை ஏற்று விளக்கேற்றும் மக்கள்!

பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று நாட்டு மக்கள் தங்களது வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து, அகல் விளக்கு மற்றும் மெழுகுவர்த்திகளை ஏற்றியுள்ளனர்.

கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் வரும் 14-ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், மக்கள் தனிமையில் இல்லாததை உணர்த்தவும் நோய்த் தொற்றுக்கு எதிராக 130 கோடி மக்களும் ஒன்றுபட்டு இருப்பதை உணர்த்தவும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு வீட்டிலுள்ள மின் விளக்குளை அணைத்துவிட்டு, அகல் விளக்கு போன்றவற்றை ஒளிரச் செய்ய வேண்டும் என்று காணொலி வாயிலாக பிரதமர் மோடி மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதனையடுத்து இன்று இரவு 9 மணி முதல் 7 நிமிடம் வரை நாடு முழுவதும் வீட்டில் உள்ள மின்சார விளக்குகளை அனைத்து, இல்லங்களுக்கு முன்னால் தீபம், மெழுகுவர்த்திகள், டார்ச்லைட்டுகள் மற்றும் செல்போன் ஒளிகளை ஒளிரவிட்டு நன்றி கூறியுள்ளனர்.

ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் அகல்விளக்கு ஏற்றினர்.

அதே போல் சென்னையில் தனது வீட்டில் ரஜினிகாந்த் மெழுகுவர்த்தி ஏந்தினார்.

நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இதனை கடைபிடித்துள்ளனர்.

பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு இணங்க நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளிலும், கட்டடங்களிலும் ஒளியேற்றினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே