ஆன்லைன் கடன் செயலி வலையில் மக்கள் சிக்கக்கூடாது – சென்னை காவல் ஆணையர்

பொதுமக்கள் ஆன்லைன் மூலம் கடன் வாங்க கூடிய செயலிகளை பயன்படுத்த வேண்டாம் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

அண்மைய நவீன காலகட்டத்தில் உலகம் முழுவதிலும் உள்ள அனைத்து மக்களுமே வீட்டிலிருந்தபடியே சாப்பிடுவது, பொருட்கள் வாங்குவது, கடன் வாங்குவது, கடன் கொடுப்பது, பணம் கட்டுவது என அனைத்தையும் மொபைல் மூலமாகவே இணையதளத்தில் செய்துவிடுகிறார்கள்.

இதனால் பலரது நேரமும் வேலையும் மிச்சம் ஆனாலும் பலரது வாழ்க்கையும் இதனால் சீரழிந்து விடுகிறது.

சில செயலிகள் மூலமாக மர்ம நபர்கள், பொது மக்களின் பணங்களை வாரிக் கொண்டும் சென்று விடுகின்றனர்.

இந்நிலையில், ஆன்லைன் மூலமாக லோன் கொடுக்க கூடிய செயலிகள் தற்பொழுது பொது மக்களால் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் சில பிரச்சனைகளையும் சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் அவர்கள், ஆன்லைன் கடன் செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக வலைதளங்களில் கடன் செயலி மூலமாக நிறைய வன்முறைகள் நடப்பதாக புகார் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே