பட்டாஸ்’ பட ஹீரோயினுக்கு நிச்சயதார்த்தம்! காதலரை மணக்கிறார்!

இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைப்பெற்றுள்ளது.

நடிகர் தனுஷ் நடித்த படம் ‘பட்டாஸ்’ படத்தின் ஹீரோயின் மெஹ்ரீன் பிர்ஸாடாவுக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பல படங்களில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஜாடா. இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா நடித்த ‘நோட்டா’, தனுஷ் நடித்த ‘பட்டாஸ்’ ஆகியப் படங்களிலும் நடித்தார்.

இவரும் ஹரியானாவின் காங்கிரஸ் பிரமுகர் பவ்யா பிஷ்னோயும் காதலித்து வந்தனர். ஹரியானாவின் முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன் தான் இந்த பவ்யா பிஷ்னோய். இவர்களது நிச்சயதார்த்தம் மார்ச் 12-ம் தேதி நடைபெறும் என முன்பே கூறியிருந்தார் மெஹ்ரீன். அதன்படி தற்போது இவர்களது நிச்சயதார்த்தம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைப்பெற்றுள்ளது. அந்தப் படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் மெஹ்ரீன். திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.

திருமணத்துக்குப் பிறகு மெஹ்ரீன் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா எனத் தெரியவில்லை. தற்போது வெங்கடேஷ், வருண் தேஜ், தமன்னா இணைந்து நடிக்கும் ‘எஃப் 3’ என்ற படம் இவரது கைவசம் உள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே