திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நலம் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார் முதல்வர் பழனிசாமி

கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ அன்பழகனின் உடல்நிலை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக எம்எல்ஏவான ஜெ.அன்பழகன், கடந்த 2-ம் தேதி திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது, அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே, திமுக எம்எல்ஏவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது குறித்து அறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கவும், தேவைப்பட்டால், அரசு மருத்துவர்களை ரேலா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், திமுக எம்எல்ஏ அன்பழகனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று மாலை மருத்துவர்கள் தெரிவித்தனர்.

80 சதவீதம் ஆக்ஸிஜன் வெண்டிலேட்டரின் மூலம்தான் வழங்கப்படுவதாக தெரிவித்தனர். இன்று காலையில், அன்பழகனின் உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகனின் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்தார்.

அப்போது, அரசு சார்பில் அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 1070 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே