உலகப் புகழ் பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

மாலை 4 மணிக்கு முடிவடைய இருந்த ஜல்லுக்கட்டு போட்டி ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது. பின்னர் மாலை 5 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது.

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 18 காளைகளை அடக்கி சிறந்த வீரராக கார்த்திக் என்ற இளைஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது

ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் என்ற இளைஞர் 2-ஆம் இடம் பிடித்துள்ளார்.

8 காளைகளை அடக்கி மேட்டுப்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் 3-ஆம் இடத்தை பிடித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே