பாக்., கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் விளையாடத் தடை

ஊழல் தடுப்பு விதிகளை மீறியதாக உமர் அக்மலை சஸ்பெண்ட் செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

ஊழல் தடுப்பு விதிகளை மீறியதற்காக உமர் அக்மலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இடைநீக்கம் செய்திருப்பதால் விசாரணை முடியும் வரை கிரிக்கெட் போட்டிகளிலும், அது தொடர்பான நிகழ்வுகளிலும் உமர் அக்மல் கலந்து கொள்ள இயலாது என அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஊழல் சட்ட விதி 4.7.1யின் படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஐஎஸ்எல் பாணியில் பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் இந்த ஆண்டுக்கான சீசன் தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்னதாக இந்த நடவடிக்கையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எடுத்துள்ளது.

இதன் மூலம் உமர் அக்மல் அங்கம் வகிக்கும் Quetta Gladiators அணிக்காக அவர் விளையாட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக லாகூரில் உள்ள தேசிய பயிற்சி மையத்தில், அணி ஊழியர் ஒருவரிடம் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சமீபத்தில் சர்ச்சையில் அக்மல் சிக்கினார். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே