டெல்லியில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் 20 பேர் உயிரிழப்பு.

கொரோனா வைரஸின் 2-வது அலை காரணமாக கொரோனா பாதிப்பு வேகமாக வருகிறது.

பல மாநிலங்களில் தடுப்பூசி ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தேவையான ஆக்ஸிஜனை வழங்க மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்துள்ளன.

இந்நிலையில், டெல்லி ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு மட்டும் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 20 நோயாளிகள் இறந்ததாக டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கையிருப்பில் உள்ள ஆக்சிஜன் ஒன்றரை மணி நேரம் மட்டுமே நீடிக்கும் என்பதால் மேலும் 200 பேரின் நிலை ஆபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 25 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே