மாலை 6 முதல் காலை 6 மணி வரை மகாராஷ்டிராவின் புனேவில் ஊரடங்கு

நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில்தான் கரோனா வைரஸ் கடுமையாக அதிகரித்துள்ளது. இங்கு மும்பை, புனே, தானே உட்பட பல நகரங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதற்காக மாநில அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. சில மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புனே நகரில் கடந்த வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஒரே நாளில் 8,011 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து புனேவில் இன்று முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை இன்று முதல் ஒரு வாரத்துக்கு அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஒரு வாரத்தில் வீடுகளுக்கு உணவுப் பொருட்கள், மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் மட்டும் விநியோகம் செய்ய அனுமதிக்கப்படும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை மீண்டும் கரோனா பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டு அதன்பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே