உலகளவில் கொரோனா தொற்று 3.14 கோடி ஆக உயர்வு..!!

உலகளவில் இதுவரை கரோனா தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 3.14 கோடியை எட்டியுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,69,287 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக கரோனா வைரஸ் தொற்றால் உலக நாடுகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன.

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தளர்வுகளுடன் பொதுமுடக்கம் தொடர்கிறது.

இந்த நிலையில் உலக அளவில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3.14 கோடியைத் தாண்டியுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,14,80,487 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை 9,69,287 ஆக உள்ளது.

கரோனா பாதித்த 3 கோடி பேரில் 2.31 கோடி பேர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தற்போது 74,01,702 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

அவர்களில் 61,805 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

உலகளவில் கரோனா பலி மற்றும் பாதிப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.

அங்கு இதுவரை 70,46,216 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2,04,506 பேர் பலியாகியுள்ளனர்.

இந்தியாவில் 55,60,105 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு அடுத்தடுத்த இடத்தில் பிரேசில், ரஷியா உள்ளிட்ட நாடுகள் உள்ளன.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே