திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் – தமிழக அரசு

திருமணங்களுக்கு செல்ல என்ன நடைமுறை என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கம் இன்றுடன் நிறவடையும் நிலையில் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதில் மேலும் சில தளர்வுகளும் வெளியிடப்பட்டிருந்தன.

ஆனால் திருமணங்கள் செய்வதற்கான நடைமுறைகள் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், இதற்கு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.

அதில், “திருமணங்களுக்கு ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும். 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.

தனிமனித இடைவெளி அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும்.

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் கட்டாயம் இ பாஸ் பெற்றுவிட்டு தான் செல்ல வேண்டும்.

திருமண அழைப்பிதழில் பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே இ பாஸ் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் போது சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் இணைக்கப்பட்டால் மட்டுமே வழங்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே