அட்சய திருதியை முன்னிட்டு ஆன்லைனில் தங்கம் முன்பதிவு!

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நகைக் கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், அட்சய திருதியை நாளில் ஆன்லைனில் தங்கம் வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் 3-வது திதியை, அட்சய திருதியை என்பர். இந்தாண்டு அட்சய திருதியை நாளை வருகின்றது.

வழக்கமாக அட்சய திருதிய நாளில் தங்கம் உள்பட மங்கல பொருட்கள் வாங்குவது நம்மை தரும் என்பதும், அந்நாளில் வாங்கும் பொருட்கள் அபிவிருத்தியாகும் என்பது மக்களின் நம்பிக்கை.

வழக்கமாக அந்நாளில் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும்.

ஆனால், இந்தாண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ளது. இதனால் நகைக்கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு அறிவிக்கப்பட்ட போது ஒரு கிராம். தங்கத்தின் விலை கிராம் 3905 ரூபாயாக இருந்தது. இன்றைய நிலவரப்படி 4509 ரூபாயாக இருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெரிய தங்க கடை நிறுவனங்கள் அட்சய திருதியை நாளில் ஆன்லைன் வாயிலாக வாங்கலாம் எனறும்; அதற்கான வழிமுறைகளை வாடிக்கையாளர்களுக்கு இணையதளம், மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தி வாயிலாக அறிவித்தது.

இதனை தொடர்ந்து பலரும் ஆன்லைன் மூலம் தங்கம் வாங்க ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர்.

இதுகுறித்து வடபழனி எஸ்.ஆர்.நகைக்கடை உரிமையாளர் சாந்தகுமார் கூறுகையில், அக்சய திருதியை என்பது நகைக்கடை வியாபாரிகளுக்கு ஆண்டிற்கு ஒருமுறை வரும் மிகப்பெரிய பண்டிகை போன்றது.

தமிழகத்தில் மட்டும், 5000 கோடி ரூபாய் வர்த்தகம் ஒரே நாளில் நடக்கும்.

ஆனால், இந்தாண்டு கடை அடைக்கப்பட்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. இருப்பினும், கொரோனாவில் இருந்து தற்காத்துகாத்து கொள்வது முக்கியது.

இருப்பினும், இந்தாண்டு ஆன்லைனில் தங்கம் விற்க ஏற்பாடு செய்துள்ளோம். இதுதொடர்பாக எங்களது வாடிக்கையாளர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம்.

தற்போதைய சூழல் தங்கத்தை காசாக வாங்கிக்கொள்ளவும், இந்நிலைமை சீரானதும் கடைகளில் நகைகளாக வாங்க கூறி உள்ளோம்,” என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே