ரூ.10,000 பட்ஜெட்ற்குள் இப்படியொரு போனா? டாப் கியர் போடும் சாம்சங்!

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அதன் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனை இந்தியாவில் ரூ.8,999 க்கு அறிமுகப்படுத்தியது. இப்போது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எம்01எஸ் எனப்படும் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது போல் தெரிகிறது. அதை உறுதிப்படுத்தும்படி கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போனின் மெமரி திறன் மற்றும் வண்ண விருப்பங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன.
வெளியான லீக்ஸ் அறிக்கையின்படி, சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 32 ஜிபி அளவிலான உள் சேமிப்புடன் வரும். சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஆனது ப்ளூ மற்றும் கிரே ஆகிய இரண்டு வண்ண வகைகளில் அறிமுகம் செய்யும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன் ஆனது ப்ளூ மற்றும் ரெட் கலர் வகைகளில் அறிமுகமானது.
மேலும், சில அறியப்படாத காரணங்களுக்காக கேலக்ஸி M01s ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 9 பை உடன் உருவாக்கப்பட்டு வருவதாகவும் வெளியான அறிக்கை நமக்குக் கூறுகிறது, ஆனால் இது கூடிய விரைவில் ஆண்ட்ராய்டு 10 ஐப் பெறக்கூடும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 439 ஐ விட சக்திவாய்ந்த சிப்செட் மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரியை விட பெரிய அளவிலான பேட்டரி திறனை கொண்டு வெளியாகும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இது இந்தியாவில் ரூ.9,990 என்கிற விலைக்கு அறிமுகமாகலாம் என்று எதிர்பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போன் இந்திய தரநிலைகள் பணியகத்தில் (பிஐஎஸ்) காணப்பட்டுள்ளது. கேலக்ஸி எம்01எஸ் ஸ்மார்ட்போன் மாடல் நம்பர் SM-M01F / DS உடன் வரும் என்று BIS சான்றிதழ் வெளிப்படுத்தி உள்ளது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்01 ஆனது 5.71 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே, 1560 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன், 1.95GH குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 ஆக்டா கோர் ப்ராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள் சேமிப்பு, டூயல் கேமரா அமைப்பு, அதில் 13 மெகாபிக்சல் முதன்மை (எஃப் / 2.2) கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் அளவிலான டெப்த் சென்சார், முன்பக்கத்தைப் பொறுத்தவரை ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ (எஃப் / 2.2) கேமரா, ஆண்ட்ராய்டு 10 இயக்க முறைமை மற்றும் 4,000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பிரதான அம்சங்களை கொண்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே