தமிழகத்தில் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் மூன்றாம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை செயலர் பிரதீப் யாதவ் தெரிவித்துள்ளார் கோடை விடுமுறை முடிந்து ஜூன் மூன்றாம் தேதி அரசு பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவித்தது, இந்நிலையில் ஜூன் 7ம் தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என சமூக வலைதளங்களில் வதந்தி பரவிவருகிறது இதுகுறித்து தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் இதுபோன்ற வதந்திகளை மாணவர்களும் பெற்றோர்களும் நம்ப வேண்டாம் எனவும் திட்டமிட்டபடி பள்ளிகள் ஜூன் மூன்றாம் தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிகள் திறக்கும் தேதியை மாற்றுவதற்கு வாய்ப்பில்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளார்.
- சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 13 பேரும் நாளை பொறுப்பேற்பு
- சென்னை கோட்டூர்புரம் அருகே 1.56 கோடி பணப் பையை வீசி விட்டு தப்பியோடிய மர்ம நபர்கள்