நேற்று உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில், இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு, தனது ஆய்வறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைச்சகத்தின் படி புற்றுநோய் இறப்பை உண்டாக்கும் உலகின் இரண்டாவது கொடிய நோய்.
2018 ம் ஆண்டில் மட்டும் இந்த நோயால் 9.6 மில்லியன் மக்கள் இறந்துள்ளனர். கிட்டத்தட்ட உலக அளவில் 6-ல் 1 பேர் இறக்கின்றனர்.
ஒவ்வொரு வருடமும் 11 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். 25 லட்சம் பேர் தற்போது புற்றுநோய் பாதித்து உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இப்படி 100 வகையான புற்றுநோய்கள் இந்த உலகை சூழ்ந்துள்ள நிலையில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்களை வெகுவாகத் தாக்கும் புற்றுநோயாக இருக்கிறது.
அதன் பிறகு புகைப்பிடித்தல், புகையிலை பழக்கத்தால் மட்டும் தோராயமாக 22 சதவீதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இப்படி உலகையே அச்சுறுத்தும் இந்த புற்றுநோயை கட்டுப்படுத்தவும், கவனம் பெறவும் உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது.
அப்படி உலக அளவில் பலரும் பாதிக்கப்படும் முதல் 5 புற்றுநோய் வகைகள் என்ன என்று பார்க்கலாம்.

தோல் புற்றுநோய் :
- இது உலக அளவில் பலரும் பாதிக்கப்பட்டிருக்கும் புற்றுநோய்.
- உடலில் வித்தியாசமாக திடீரென சதை பற்று கொண்டு வளர்ந்து கொண்டே வரும்.
- இது உடல் செல்கள் அபரிமிதமான வளர்ச்சியை அடையும் போது இந்த மாற்றம் வரும்.
- இது சூரிய ஒளியின் தாக்கத்தால் முகம், உதடு, காது, கழுத்து, மார்பு, கைகள், தலை முடி வேர்கள் போன்ற இடத்தில் வளரும்.

மார்பகப் புற்றுநோய் :
- இது புற்றுநோயிலேயே உலக அளவில் இரண்டாவது இடத்தை கொண்டிருக்கிறது.
- என்னதான் ஆண் பெண் என பொதுவாக தாக்கினாலும் பெண்களைதான் வெகுவாக எட்டிப்பிடிக்கிறது.
- எட்டில் ஒரு பெண் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- இந்த புற்றுநோய் மார்பகங்களில் கட்டி வளர்ச்சியை உண்டாக்குகிறது.
- அளவில், அமைப்பில், தோற்றத்தில் மாற்றத்தை உண்டாக்குகிறது.
- காம்புகளில் தோல் உறிதல், ரத்தக் கசிவு, வலி , சிவப்பாக மாறுதல் என இதுபோன்ற அறிகுறிகளை உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

நுரையீரல் புற்றுநோய் :
- புகைப்பிடித்தல் பழக்கத்தாலேயே பெரும்பாலானோர் இந்தப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- சமீபத்தில் பெண்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர்.
- அதுவும் புகைப்பழக்கம் இல்லாத பெண்களை தாக்குகிறது.
- இந்த புற்றுநோய் செல்கள் இரண்டாக உடைந்து வேகமாக வளர்ந்து உடல் முழுவதும் பரவுகிறது.
- நுரையீரல் புற்றுநோய் வந்தால் இருமல் வரும் போது ரத்தம் வருதல், மூச்சு விட முடியாமல் கஷ்டப்பட்டுதல், மார்பு வலி, உடல் எடைக் குறைதல், தலை வலி, எலும்பு வலி போன்ற அறிகுறிகள் வரும்.

கருப்பையகப் புற்றுநோய் :
- இந்த புற்றுநோயானது எண்டோமெட்ரியல் கேன்சர் என்றே அறியப்படுகிறது.
- பெண்களின் கருப்பை தாக்குகிறது.
- இது மாதவிடாய் சுழற்சி நின்ற பின் இந்த புற்றுநோய் உருவாகிறது.
- இது வெஜினா வழியாக இரத்தப்போக்கை உண்டாக்கி வயிறு மற்றும் இடுப்பு வலியை உண்டாக்குவது இதன் அறிகுறியாகும்.

தைராய்டு புற்றுநோய் :
- தொண்டையில் வளரும் தேவையற்ற செல்களால் இந்த புற்றுநோய் வளர்ச்சியடைகிறது.
- உடலுக்குத் தேவையான ஹார்மோன் சுரப்பிகளை அளிக்கும் தைராய்டு உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் மிக முக்கியமானது.
- இந்த புற்றுநோயை அவ்வளவு எளிதாகக் கண்டறிய முடியாது.
- அதன் வளர்ச்சி அதிகமாகும்போது கழுத்தில் வீக்கம் உண்டாகும்.
- குரல் மாற்றம் , உணவுகளை விழுங்குவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தெரியும்.
10 இந்தியர்களில் ஒருவருக்கு புற்றுநோய் தாக்கும் அபாயம் இருப்பதாக, சர்வதேச சுகாதார அமைப்பு கூறியுள்ளது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெரும்பாலானோருக்கு புகையிலை காரணமாகவே, புற்றுநோய் ஏற்படுவதாகவும், இந்த வகை புற்றுநோய் ஆண்களுக்கு பெரும்பாலும் வாய் பகுதியிலும், பெண்களுக்கு கழுத்துப் பகுதியிலும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வகை புற்றுநோய், சாதாரண மக்களை அதிகம் தாக்குவதாகவும், உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.