2019 – 20 நேற்றோடு முடிந்து, இன்று முதல் 2020 – 21-ம் நிதி ஆண்டு தொடங்கி இருக்கிறது.
பொதுவாக இந்த நிதி ஆண்டு பிறப்பை வியாபாரிகள், வங்கியாளர்கள் மற்றும் நிதித் துறைகளில் இருப்பவர்கள் தான் கொண்டாடுவார்கள்.
ஆனால் இன்று ஏப்ரல் 01, 2020-ஐ பெரும்பாலானவர்கள் கொண்டாட முடியாத நிலையில் இருக்கிறார்கள். காரணம் கொரோனா.
சரி பங்குச் சந்தை கொண்டாடியதா..?
அதோடு பங்குச் சந்தைகளில் கூட இந்த புதிய நிதி ஆண்டு செண்டிமெண்ட் அவ்வப் போது எதிரொலிக்கும். ஆனால் இன்று எதிரொலிக்கவில்லை என்பது தான் வருத்தம்.
தற்போது சென்செக்ஸ் சுமாராக 800 புள்ளிகள் சரிந்து வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆக புதிய நிதி ஆண்டை 800 புள்ளிகள் சரிந்து தொடங்கி இருக்கிறது சென்செக்ஸ்!
நேற்று மாலை சென்செக்ஸ் 29,468 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.
இன்று காலை சென்செக்ஸ் 29,505 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது.
கேப் அப்பில் வர்த்தகமாகத் தொடங்கினாலும், சரியத் தொடங்கி, இன்றைக்கு குறைந்தபட்சமாக 28,646 புள்ளிகளைத் தொட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது சுமார் 800 புள்ளிகள் சரிவில் 28,670 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
நேற்று மாலை நிஃப்டி 8,597 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.
இன்று காலை நிஃப்டி 8,584 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கி தற்போது 8,398 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
ஆக நிஃப்டி 198 புள்ளிகள் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
சென்செக்ஸின் 30 பங்குகளில் 04 பங்குகள் ஏற்றத்திலும், 26 பங்குகள் இறக்கத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
பிஎஸ்இ-யில் 1,533 பங்குகள் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. அதில் 837 ஏற்றத்திலும், 618 பங்குகள் இறக்கத்திலும், 78 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இன்று என்னவோ ரண களம் இருப்பதாகவே காட்டுகிறது இந்த பங்கு நிலவரங்கள்.
இண்டஸ் இண்ட் பேங்க், கெயில், ஜி எண்டர்டெயின்மெண்ட், சிப்லா, மாருத் சுசூகி போன்ற பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
கோட்டக் மஹிந்திரா அதானி போர்ட்ஸ், பாரத் பெட்ரோலியம், எஸ் பி ஐ, இன்ஃபோசிஸ் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
நேற்று மார்ச் 31, 2020 அமெரிக்காவின் நாஸ்டாக் 0.95 % இறக்கத்தில் வர்த்தகம் நிறைவு அடைந்தது.
லண்டனின் எஃப் டி எஸ் இ 1.95 % ஏற்றத்தில் வர்த்தகமானது.
பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.40 %, ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் 1.22 % ஏற்றத்திலும் வர்த்தகமாயின.
உலக சந்தைகள் ஓரளவுக்கு கொரோனா பீதியில் இருந்து வெளி வரத் தொடங்கிவிட்டன.
ஆனால் ஐரோப்பிய சந்தைகளுக்கு நேர் எதிராக இன்று ஆசிய சந்தைகள் எல்லாம் சரிவில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
இந்தோனேசியாவின் ஜகர்தா காம்போசைட் மற்றும் சீனாவின் ஷாங்காய் காம்போசைட் மட்டுமே சொற்பமாக ஏற்றத்தில் வர்த்தகமாகி க்கொண்டு இருக்கின்றன.
எனவே இந்திய சந்தைகளும் வழக்கம் போல சரிய வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.