INDIAN-2 படப்பிடிப்பு விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி நிதியுதவி

3 ஆண்டுகளுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்ட இந்தியன் திரைப்படம் பல இழுபறிகளுக்கு பிறகு ஒரு வழியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது.

ஆனாலும் பல பிரச்சனைகளால் படப்பிடிப்பு ஆமைவேகத்தில் நடந்தது.

கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம், பிக்பாஸ் போன்ற காரணங்கள் சொல்லப்பட்டாலும் ஷங்கருக்கும் தயாரிப்பாளருக்கும் பட்ஜெட் தொடர்பாக பிரச்சனை நீடித்து வருவதாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் நடந்த கோர விபத்தில் 3 பேர் பலியானதை அடுத்து மிகப்பெரிய சர்ச்சைகளோடு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

அதன் பின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்றே தெரியாத நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சத்தால் ஒட்டு மொத்த திரையுலகமும் முடங்கியுள்ளது.

கொரோனா காலம் முடித்து எப்போது திரையுலகம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என பலரும் கேள்விகள் எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உயிரிழந்த 4 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே