#NZvIND : நியூசிலாந்து அணிக்கு 348 ரன்கள் இலக்கு..

நியூசிலாந்துக்கு அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அதிரடியாக விளையாடி இந்திய அணி 347 ரன்கள் குவித்துள்ளது.

இந்தியாவிற்கு எதிரான முதல் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால், ப்ரிதிவ் ஷா களமிறங்கினர்.

தனது முதல் ஒரு நாள் சர்வதேச போட்டியில் விளையாடிய ப்ரிதிவ் ஷா 20 ரன்னிலும், மயங்க் அகர்வால் 32 ரன்னிலும் அவுட்டாகினர்.

இறுதியில் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் குவித்தது.

இந்திய அணியில் ஷ்ரோயஸ் ஐயர் 103 ரன்களும், கே.எல்.ராகுல் 88 ரன்களும், கேப்டன் விராட் கோலி 51 ரன்களும் விளாசினர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே