கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான் – முதல்வர் மு.க.ஸ்டாலின்

கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கோவையில் 5 மாவட்ட ஆட்சியகளுடனான ஆலோசனைக்கு பின் முதல்வர் ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு காரணமாக தமிழக்ததில் கரோனா பாதிப்பு குறைந்துள்ளது. கரோனா தடுப்புப் பணியில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கோவை மட்டுமல்ல, எந்த ஊர்களும் எங்கள் ஊர்தான். திமுக அரசு பாரபட்சம் பார்க்கவில்லை.

சென்னையை அடுத்து கோவையில் தான் அதிக தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தேவைப்பட்டால் இன்னும் 2 நாள்களுக்கு பிறகு கூட கோவை வருவேன்.

தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் கோவை, திருப்பூரில் பாதிப்பு அதிகரித்துள்ளது. சென்னையைவிட கோவையில் கரோனா தொற்று அதிகம் பதிவானாலும் கடந்த 2 நாள்களாக குறைந்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை 36,000 என்ற அளவிலேயே கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது.

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக பிபிஇ உடை அணிந்து நோயாளிகளை சந்தித்தேன். எந்த மாவட்டங்களிலும் ஆக்ஸிஜன், படுக்கை வசதி பற்றாக்குறை இல்லை. அரசும், மக்களும் சேர்ந்தால் கரோனா மட்டுமல்ல, எந்த நோயையும் வெல்ல முடியும்.

இந்தியாவிலியே அதிகளவில் ஆக்ஸிஜன் படுக்கை வசதிகளை உருவாக்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே