இங்கு ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை – ஈஷா நிர்வாகம்

ஈஷா யோக மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என வதந்திகள் வெளியான நிலையில் ஈஷா யோக மையம் அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

ஈஷா யோகா மையத்தில் சிவராத்திரி நிகழ்ச்சியில் பல்வேறு மாநிலங்களில் இருந்து மக்கள் பங்கேற்ற நிலையில், அதில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என மக்களிடையே அச்சம் நிலவுகிறது.

அதை தொடர்ந்து ஈஷா யோக மையத்தில் உள்ள சிலருக்கு கொரோனா இருப்பதாக சமூக வலைதளங்களில் யாரோ பதிவிட அந்த தகவல் வேகமாக மக்களிடையே பரவி வருகிறது.

இந்நிலையில் தேவைப்பட்டால் ஈஷா சிவராத்திரியில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என தமிழக முதல்வர் தெரிவித்திருந்தார். 

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஈஷா யோகா மைய நிர்வாகம், ஈஷா யோகா மையத்தில் உள்ளவர்களுக்கு கொரோனா இருப்பதாக வெளியான செய்தி போலியானது, போலி செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசிடம் முறையிட்டுள்ளது.

மேலும் கடந்த பிப்ரவரி மாதம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈஷா யோகா மையத்தை ஆய்வு செய்து தூய்மையாக இருப்பதாக சான்றளித்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே