திமுக – காங் கூட்டணியை யாராலும் பிரிக்க முடியாது : புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

தமிழகம், புதுவையில் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி பலமாக உள்ளதாகவும் வரும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி தொடரும் என்றும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை அவர் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாராயணசாமி, உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளவும் பொங்கல் வாழ்த்து தெரிவிக்கவும் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாக தெரிவித்தார்.

தி.மு.க. காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரிவும் இல்லை என்ற அவர், அரசியல் கூட்டணியில் ஒரு சில நேரங்களில் கருத்து வேறுபாடுகள் வருவது வழக்கம் என்றும்; அதை பேசி தீர்த்துக்கொள்வோம் என்றும் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே