இந்திய விமானப்படையின் 18-வது ஸ்குவாட் ரன் படைப்பிரிவில் அதிநவீன தேஜஸ் விமானம் சேர்ப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூரில் உள்ள விமான படைப்பிரிவில் சேர்க்கப்பட்டது.

இந்தியாவில் பாதுகாப்பை அதிகரிக்கவும் போர்தளவாடங்களை முடிந்தவரை உள்நாட்டிலேயே தயாரிக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதில் ஒரு பகுதியாக ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம், ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனம் ஆகியவை இணைந்து, இந்திய கடற்படையை மேம்படுத்தும் வகையில் புதிய அதிநவீன தேஜஸ் விமானத்தை தயாரித்துள்ளன.

இது முழுவதும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 4 ஆம் தலைமுறை போர் விமானம் ஆகும். சுமார் 7 டன் எடை கொண்ட இந்த போர் விமானம் ஒலியின் வேகத்துக்கு இணையாக அதிவேகத்தில் செல்லக்கூடியது. 

மேலும் இந்த தேஜஸ் போர் விமானம் கடற்படை பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட அதிநவீன தேஜஸ் விமானம் கோவை சூலூர் விமானப்படையில் உள்ள 18-வது ஸ்குவாட் ரன் படைப்பிரிவில் இன்று சேர்க்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் இந்திய விமானப்படை தளபதி பதாரியா கலந்துகொண்டு விமானத்தை இயக்கினார்.

போர்காலங்களில் உபயோக்கப்படுத்தப்படவுள்ள இந்த விமானம் சூலூரில் உள்ள விமானப்படைத் தளத்தில் பயிற்சியை மேற்கொள்ளவுள்ளது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே