கடலூரை நெருங்கி வரும் நிவர் புயலானது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய வானிலை மையம் கூறுகையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலானது மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நிவர் புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இது கடலூரை நெருங்கி வருகிறது.

கடலூருக்கு 290 கி.மீ தூரத்தில் உள்ளது. அது போல் புதுவையிலிருந்து 300 கி.மீ. தூரத்திலும்; சென்னையிலிருந்து 350 கி.மீ. தூரத்திலும் இந்த புயலானது நிலை கொண்டுள்ளது.

இது இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை நிவர் கரையை கடக்கும். 

புயல் கரையை கடக்கும் போது 145 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே