நிவர் புயலின் நகரும் வேகம் 11 கி.மீ. ஆக அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் தீவிர நிவர் புயல், கடந்த ஆறு மணி நேரமாக மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயலானது தற்போது மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இது தற்போது கடலூரிலிருந்து 240 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியிலிருந்து 250 கி.மீ. வேகத்திலும் சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
தீவிர நிவர் புயலானது, அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக மாறும்.
இது வடமேற்காக நகர்ந்து தமிழ்நாடு – புதுச்சேரி இடையே காரைக்கால் – மகாபலிபுரம் பகுதியில் இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை அதி தீவிரப் புயலாக கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிவர் அதி தீவிரப் புயலானது கரையைக் கடக்கும் போது மணிக்கு 120 – 130 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.
சில வேளைகளில் மணிக்கு 145 கி.மீட்டர் வேகத்திலும் காற்று வீசக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.