தமிழகம் உட்பட 15 மாநிலங்களுக்கு ரூ.6,195.08 கோடி விடுவித்தது மத்திய நிதியமைச்சகம்!

மாநிலங்களுக்கு 15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி மூன்றாம் கட்டமாக ரூ. 6 ஆயிரம் கோடி மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது.

ஒவ்வொரு மாநிலதிற்குமான வருடாந்திர வரவு செலவு அறிக்கையின் நிதிப் பற்றாக்குறையை ஈடு செய்வதற்காக, மத்திய அரசிடம் இருந்து நிதிப் பற்றாக்குறை மானியமானது தவணை முறையில் வழங்கப்படுவது நடைமுறையாகும்.

அந்த வரிசையில் மூன்றாவது கட்டமாக ஆந்திரம். கேரளம், ஹிமாச்சல் பிரதேசம்,மேற்கு வங்கம், உத்தரகாண்ட், தமிழ்நாடு, பஞ்சாப், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம் தவிர்த்த ஏனைய ஆறு வட கிழக்கு மாநிலங்கள் என மொத்தம் மாநிலங்களுக்கு, புதனன்று மத்திய அரசு ரூ.6195.08 கோடியை விடுவித்துள்ளது.

இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த நிதியானது வழக்கத்தை விட முன்னதாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கரோனா ஊரடங்கின் காரணமாக உருவாகியுள்ள பொருளாதார பாதிப்பில் இருந்து மீண்டு வர முயன்று கொண்டிருக்கும் மாநிலங்களுக்கு இது உதவியாக இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது.

மொத்தமுள்ள மாநிலங்களில் கேரளாவிற்கு அதிகபட்சமாக ரூ.1277 கோடி மானியமும், இரண்டாவதாக ஹிமாச்சல் பிரதேசத்திற்கு ரூ.953 கோடி நிதியும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே