புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கான பூமி பூஜை நடத்தினாலும் கட்டுமான பணியை தொடங்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக புதிய நாடாளுமன்ற கட்டிடம் அமைக்கும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

நாடாளுமன்ற கட்டடம் குறித்த வழக்கு நிலுவையில் இருக்கும் பொது கட்டுமானங்களை தொடங்குவது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டுமானங்கள் நடக்கவில்லை என்பதை உறுதிப்படுத்த சொலிசிட்டர் ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 10 -ல் புதிய நாடாளுமன்ற கட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ள நிலையில் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே