வெள்ளக்காடாக காட்சியளிக்கும் அசாம்..! (படங்கள்)

அசாம் மாநிலத்தில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் காரணமாக இதுவரை 68 பேர் பலியாகி உள்ளனர்.

மாநிலத்தில் உள்ள 30 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் 4,500க்கும் அதிகமான கிராமங்கள் நீரில் மூழ்கி உள்ளதாகவும், 48 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் அசாம் மாநில பேரிடர் லோண்மை ஆணையம் அறிவித்துள்ளது.

ஜோர்ஹாட், திப்ருகார், தின்சுகியா போன்ற மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு வெள்ளத்தின் காரணமாக பல சாலைகளும், பாலங்களும், கட்டடங்களும் அடித்துச் செல்லப்பட்டன.மாநிலம் முழுவதும் 487 வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

அவற்றில் 1.25 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதித்தோரின் எண்ணிக்கையும் இன்று காலை ஒரு லட்சத்துக்கும் மேல் உயர்ந்து 36,42,546 ஆகியுள்ளது.

அசாமில் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 247 மீட்பு முகாம்களில் 37,000-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ளனர். 91 வருவாய் வட்டங்கள் மற்றும் 3,363 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. 26 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

பிரம்மபுத்திரா நதி 5 இடங்களிலும், கோப்பிலி நதி 2 இடங்களிலும் என அசாமில் ஓடும் 8 பிரதான நதிகளும் அபாயகர கட்டத்துக்கு மேல் ஓடிக்கொண்டிருக்கினறன.

தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளூர் நிர்வாகத்துடன் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மாலை முதல் 295 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே