சென்னையில் தங்கம் விலை ரூ.136 உயர்ந்து ரூ.40,384க்கு விற்பனை

ஆண்டு தொடக்கத்தில் ரூ.27 முதல் 30 வரையிலேயே நீடித்து வந்த தங்க விலை மாறிமாறி ஏற்றதையும் இறக்கத்தையும் கண்டது.

அதனைத்தொடர்ந்து, கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொருளாதார சரிவு மற்றும் வரத்து குறைவால் தங்க விலை வரலாறு காணாத விலை உயர்வை அடைந்ததது.

சுமார் ரூ.44 ஆயிரம் உயர்ந்த தங்கம் 50 ஆயிரத்தை எட்டும் என கூறப்பட்டது.

ஏற்கனவே பண ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மக்களிடையே இந்த தங்க விலை உயர்வு பேரதிர்ச்சியை உண்டாக்கியது.

தங்கம் மட்டுமல்லாது வெள்ளி விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்துள்ளது.

இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.5,048க்கு விற்கப்படுகிறது. 

அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.40,384க்கு விற்கப்பட்டு வருகிறது.

மேலும் வெள்ளி விலை 80 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.72.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே