வழிகாட்டு நெறிமுறைகளின் படி வரும் நவம்பர் 10ம் தேதி முதல் திரையரங்குகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

ஆனால், விபிஎப் கட்டண விவகாரத்தினால் புதிய படங்கள் வெளியிடுவதில் சிக்கல் இருந்தது.

இந்நிலையில், 10ம் தேதி முதல் புதிய படங்களை வெளியிட வேண்டும் என்றும், புதிய படங்களை வெளியிடும்போது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜீ தெரிவித்துள்ளார்.

புதிய படங்களை வெளியிட இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்க வேண்டாம். திரையரங்குகளை திறக்க இன்னும் 5 நாட்களே உள்ளதால் விபிஎப் கட்டண விவகாரத்தை உடனே பேசி தீர்வு காண முடியாது .

புதிய படங்களை ரிலீஸ் செய்த பிறகு விபிஎப் பிரச்சனையை பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே