திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் கோரிக்கைகளை ஏற்றால் மட்டுமே புதிய படங்கள் ரிலீஸ் – தயாரிப்பாளர்கள்

கொரோனா தொற்றின் காரணான கடந்த ஐந்து மாதங்களாக திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளன.

இத்திரையரங்குகளை மீண்டும் திறப்பதற்கான முயற்சிகளை திரையரங்க உரிமையாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், திரையரங்ககள் திறக்கப்பட்டாலும் எங்களின் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்தான் புதுப்படங்கல் ரிலீஸ் ஆகும் என உறுதியாக கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக இயக்குநரும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவருமான பாரதிராஜா, தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்,

”தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பலர் ஒருங்கிணைந்து தங்களுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம். 

அதில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தை சேர்ந்த பலரும், எங்கள் சங்கத்தை சாராதவர்களும் உள்ளனர்.

அந்த கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து, தங்களின் மேலான பதிலை அனுப்பவும்.

அரசாங்கத்தின் அனுமதியோடு திரையரங்குகள் திறக்கப்பட்டாலும், தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மத்தியில் நாங்கள் கடிதத்தில் குறிப்பிட்ட விஷயங்களில் உடன்படிக்கை ஏற்படாவிட்டால், எங்களால் புதிய படங்களை வெளியிட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவோம் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்”என்று குறிப்பிட்டுள்ளார்.

அக்கடித்தில் உள்ள நிபந்தனைகள்:

கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கியூப் -க்கன கட்டணத்தை தயாரிப்பாளர்களாகிய நாங்கள் செலுத்தி வந்துள்ளோம்.

இது புரஜக்டர் முதலீட்டுக்கும் அதிகமான தொகை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே கியூப்க்கான கட்டணங்களை இனி தயாரிப்பாளர்களாகிய எங்களால் செலுத்த முடியாது.

பல படங்களுக்கு திரையரங்குகளில் முறையான திரை மற்றும் காட்சிகள் கிடைக்காத நிலையில் திரையரங்கு ஷேர் விகிதங்கள் 50,40,30 மிகவும் குறைவாக இருப்பதால் அவைகளை மாற்றி சரியாக முடிவு செய்ய வேண்டும்.

திரையரங்கில் காட்டப்படும் விளம்பர வருமானத்தில் பல கோடி கொட்டி படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு எந்த வருமானமும் இல்லை.

திரையரங்களில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களின் மூலம் கிடைக்கும் வருவாயில் அந்த நாளில் திரையிடப்படும் படங்களின் தயாரிப்பாளருக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டும்.

BOOK MY SHOW, TICKET NEW ஆன்லைன் டிக்கெட் மூலம் வரும் தொகையில் தயாரிப்பாளர்களுக்கு ஒரு பகுதி வேண்டும்.

ஹோல்டு ஓவர் முறையை எந்த திரையரங்கும் பின்பற்றுவதில்லை.

நன்றாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை திடீரென்று நிறுத்தவும், நல்ல தரமான படங்களை பிக் அப் ஆவதற்கு வாய்ப்பளிக்காமல் மறுக்கப்படுவதும் மிகவும் வேதனைக்குரியது.

திரையங்குகளை லீஸ் எடுத்து நடத்துவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

ஆனால், CONFIRMATION என்ற பெயரில் பல திரையரங்குகள் சிலரால் எடுத்து நடத்தப்படும் பொழுது தயாரிப்பாளர்களூக்கான SECOND RUN/ DEPOSIT போன்ற பல வியாபார சுதந்திரங்கள் பறிபோகின்றன.

எனவே மேற்கண்ட CONFIRMATION செய்பவர்களால் நடத்தப்படும் எந்த திரையரங்குகளிலும் எங்களது படங்களை திரையிட இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே