சைலன்ட் ஆக வாட்ஸ்அப்பில் அறிமுகமான புதிய அம்சம்; பயனர்கள் குஷி!

வாட்ஸ்அப் அதன் பிளாட்பார்மில் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இந்த அம்சம் வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில் காணப்பட்டது.

வாட்ஸ்அப் சார்ந்த அப்டேட்களை கூர்மையாக கண்காணிக்கும் தளமான WABetainfo வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அனிமேஷன் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் வாட்ஸ்அப் 2.20.194.7 ஆண்ட்ராய்டு பீட்டா மற்றும் 2.20.70.26 iOS பீட்டா பதிப்புகளில் கிடைத்தன.

ரூ.12,840 என்கிற விலைக்கு சம்பந்தமே இல்லாத வேற லெவல் போன் அறிமுகம்!

இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் அனிமேஷன் ஸ்டிக்கர்களை மற்ற பயனர்களுக்கு நேரடியாக வாட்ஸ்அப் தளத்திலிருந்து அனுப்பலாம். பெறப்பட்ட அனைத்து அனிமேஷன் ஸ்டிக்கர்களை பயனர்கள் சேமித்து வைத்தும் அனுப்பலாம். மேலும், ஒருவர் வாட்ஸ்அப் ஸ்டோரிலிருந்து டீபால்ட் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் பேக்கையும் பதிவிறக்கம் செய்யலாம்.

கூறப்படும் புதிய வாட்ஸ்அப் அனிமேஷன் ஸ்டிக்கர்கள் லூப்பில் இல்லை என்பதை வெளியான அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அதாவது ஸ்டிக்கர்கள் எப்போதுமே அனிமேஷன் இயக்கத்திலேயே இருக்காது, நீங்கள் உங்களின் வாட்ஸ்அப் சாட்டை மேலும் கீழும் ஸ்க்ரோல் செய்யப்படும் நேரத்தில் மட்டுமே அது இயங்கும் என்று அர்த்தம். வாட்ஸ்அப் நிறுவனம் லூப்பிங் அனிமேஷன் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்துமா இல்லையா என்பது குறித்து விவரங்கள் இல்லை.

இதற்கிடையில், அனிமேஷன் செய்யப்பட்ட வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை v2.20.194.7-இல் கிடைத்ததாக ஆண்ட்ராய்டு போலீஸ் தளம் தெரிவித்துள்ளது, ஆனால் அது v2.20.194.9-இல் காணாமல் போனது.

தற்போது வரையிலாக Playful Piyomaru, Rico’s Sweet Life, Moody Foodies, Chummy Chum Chums மற்றும் Bright Days உள்ளிட்ட ஐந்து அனிமேஷன் ஸ்டிக்கர் பேக்குகள் அணுக கிடைக்கிறது.

இதற்கிடையில், வாட்ஸ்அப் நிறுவனம் கியூஆர் கோட் சார்ந்த ஆதரவிலும் செயல்படுகிறது. கூறப்படும் QR குறியீடு அம்சமானது இப்போது வாட்ஸ்அப் பீட்டா v2.20.17-இல் கிடைக்கிறது, மேலும் பயனர்கள் அதை டெஸ்ட் ஃப்ளைட்டிலிருந்து பதிவிறக்கம் செய்யலாம். இந்த அம்சம் எப்படி இருக்கும் என்பதற்கான சில ஸ்கிரீன் ஷாட்களையும் வாட்ஸ்அப்பீட்டா இன்போ வலைத்தளம் பகிர்ந்துள்ளது.

ஜூன் 30 வரை பொறுங்க; சூப்பர் பட்ஜெட் விலையில் தரமான போன் அறிமுகமாகுது!

குறிப்பிட்ட வெர்ஷனின் கீழ், செட்டிங்ஸ் மெனுவில் உள்ள ப்ரொபைல் பிரிவில் வாட்ஸ்அப் கியூஆர் குறியீடு அம்சம் அணுக கிடைக்கிறது. தொடர்புடைய ஐகானை நீங்கள் டேப் செய்யும்போது, அது QR குறியீட்டைக் காண்பிக்கும். வாட்ஸ்அப்பில் உங்களை எளிதாகக் கண்டுபிடிப்பதற்காக, உங்கள் எண்ணைப் பெறுவதற்காகவும் ஸ்கேன் செய்யக்கூடிய உங்கள் நண்பர்களுடன் இந்த குறியீட்டை நீங்கள் பகிரலாம்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே