காஞ்சிபுரத்தில் கழிவறை தொட்டியில் விழுந்து அரசு பெண் ஊழியர் உயிரிழந்த சம்பவத்தில் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு அலுவலகங்களில் கழிவறை வசதி இல்லாததால் நடந்த துயர சம்பவத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வேளாண் துறையை சேர்ந்த மாற்றுத் திறனாளி பெண் ஊழியர் உயிரிழப்பு குறித்து விரிவான அறிக்கை அளிக்க தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
அரசு அலுவலகங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 6 வாரங்களில் அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.