டி 20 கிரிக்கெட் தொடர் வெற்றி குறித்து இது மறக்கமுடியாத ஸ்பெஷலான ஒன்று என நடராஜன் தெரிவித்துள்ளார்

தமிழகத்தை சேர்ந்த யார்க்கர் மன்னன் தங்கராஜ் நடராஜன் இந்திய அணிக்காக ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார்.

ஆஸ்திரேலிய அணி உடனான மூன்றாவது ஒருநாள் போட்டியில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுக வீரராக களம் இறங்கிய அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தார்.

இந்திய அணியின் வெற்றிக்காக பங்களிப்பு டி20 போட்டிகளிலும் தொடர்கிறது.

முதல் டி20 போட்டியில் 3 விக்கெட் எடுத்தார் நடராஜன். இரண்டாவது டி20 போட்டியில், இந்தியாவுக்காக நடராஜன் 4 ஓவர் வீசி 20 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசும் நடராஜனுக்கு உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்குமா என பலரும் எதிர்பார்ப்புகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தன்னுடைய முதல் டி20 தொடர் குறித்து நடராஜன் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், என் நாட்டிற்காக முதல் தொடர் வெற்றி. இது மறக்கமுடியாதது; ஸ்பெஷலானது எனப் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே