பாஜகவில் இணைந்த நமீதா!

நடிகர் ராதாரவியைத் தொடர்ந்து நடிகை நமீதாவும் அதிமுகவிலிருந்து விலகி பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத்தை பூர்வீகமாகக் கொண்டவர் நடிகை நமீதா.

2002-ம் ஆண்டு சொந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானார்.

தொடர்ந்து மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்த நமீதா பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

ஆனால் அதிமுகவில் இணைந்ததற்கு பின்னரும் பெரும்பாலும் அவர் அரசியல் பொதுக்கூட்டங்களிலோ, பிரசாரக் கூட்டங்களிலோ அதிகம் தலைகாட்டவில்லை.

இந்நிலையில் இன்று சென்னையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ள பாஜகவின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் நடிகை நமீதா பாஜகவில் இணைந்துள்ளார்.

முன்னதாக நடிகர் ராதாரவியும் அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே