மியான்மரில் தற்போது அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அங்கு நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டிய அந்நாட்டு ராணுவத்தினர் ஆங் சன் சூ காய் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை வீட்டுச் சிறையில் வைத்துள்ளது.

கடந்த 20 நாட்களாக மியான்மரில் ஜனநாயக ஆதரவாளர்கள் யாங்கன் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போராட்டப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து அங்கு தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டது. காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ராணுவத்தினரின் இந்த அடக்குமுறைக்கு உலகம் முழுக்க இணையத்தில் கண்டதும் குவிந்தது.

பேஸ்புக் தளம் மியான்மர் நாட்டில் தற்காலிகமாக முடக்கப்பட்ட நிலையில் தற்போது இயங்கி வருகிறது. 

இந்நிலையில் போராட்டக்காரர்கள் பலர் போராட்டங்கள் குறித்த புகைப்படங்கள் தகவல்களை பேஸ்புக் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தின் உச்சகட்டமாக கலவரத்தில் ஈடுபட்ட இரண்டு போராட்டக்காரர்கள் ராணுவத்தினரால் முன்னதாக சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து இந்த போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது.

தற்போது மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான டாட்மேடவ், பேஸ்புக் வரம்புகளை மீறியதற்காக முடக்கப்பட்டுள்ளது.

ஆங் சன் சூ காய் குறித்து வதந்திகளைப் பரப்பும் 70-க்கும் மேற்பட்ட மியான்மர் ராணுவத்தின் போலி பேஸ்புக் பக்கங்களை இந்த செயலின் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இதனைத்தொடர்ந்து பலமுறை பேஸ்புக்கின் வரம்புகளை இந்த ராணுவ பக்கம் மீறிவந்ததால் தற்போது முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள நமது தளத்தின் Android App டவுன்லோட் செய்யுங்கள். App Download

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே